Connect with us

சிவாஜி கணேசனுக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுக்க சொல்லி காசு செலவு செய்த ரசிகர்… இப்படி ஒரு Backstory இருக்கா?

CINEMA

சிவாஜி கணேசனுக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுக்க சொல்லி காசு செலவு செய்த ரசிகர்… இப்படி ஒரு Backstory இருக்கா?

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.

அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.

சிவாஜி கணேசன் 60 கள் மற்றும் 70 களில் தனது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார். தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே கதாநாயகனாக நடித்து உச்சத்தைத் தொட்டவர் சிவாஜி கணேசன். அவருக்கு 1957 ஆம் ஆண்டு அம்பிகாபதி திரைப்படத்தில் ‘நடிகர் திலகம்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இந்த பட்டத்தை இவருக்குக் கொடுக்க மிகமுக்கியமான காரணமே ஒரு ரசிகர்தானாம்.

   

1950 களில் சம்பத்குமார் என்பவர் பேசும்படம் என்று ஒரு சினிமா பத்திரிக்கையை நடத்தி வந்துள்ளார். அதில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார். அப்படிதான் பராசக்தி படத்தில் சிவாஜி கணேசனின் புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் இவர் முன்னணி நடிகராக வருவார் எனக் கூறியுள்ளார்.

 

இதனை கவனித்த சினிமா ரசிகர்கள் ஒரு ரசிகர், சிவாஜி கணேசனுக்காக பேசும் படம் பத்திரிக்கை ஒரு விழாவை நடத்தி நடிகர் திலகம் என்ற பட்டத்தை வழங்க வேண்டும் என கடிதம் எழுதி அதற்காக பணத்தையும் சம்பத் குமாருக்கு அனுப்பி வைத்தாராம். அதன் பிறகுதான் சம்பத் குமார் பேசும்படம் பத்திரிக்கையில் சிவாஜியைப் பற்றி எழுதும்போதெல்லாம் ‘நடிகர் திலகம்’ என்று எழுத ஆரம்பித்துள்ளார். அந்த பட்டம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அதன் பின்னர் அம்பிகாபதி படத்தில் இடம்பெற்றுள்ளது.

 

Continue Reading
To Top