திடீரென கேன்சல் ஆன அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் முக்கிய விஷயம்.. வெளியான அறிவிப்பால் ஷாக்கில் ரசிகர்கள்..!

By Nanthini on பங்குனி 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் இறுதியாக விடா முயற்சி திரைப்படம் வெளியான நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. நாளுக்கு நாள் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தரமான பேன் பாய் சம்பவமாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குட் பேட் அக்லி' படத்தின் இரண்டாவது லுக் வெளியானது - அஜித் ரசிகர்கள்  ஆரவாரம்! | Good bad ugly second look released ajith fans cheer - kamadenu  tamil

   

இதனை தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு குட் பேட் அக்லியை ஆதிக்கவிச்சந்திரன் இயக்கியுள்ளார். அஜித்தின் தீவிர ரசிகரான இவர் தற்போது அஜித்தையே வைத்து படத்தை இயக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்த நிலையில் அஜித் பல கெட்டப்களில் மாஸ் காட்டி இருந்தார். இதனால் இப்படம் அஜித் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   

குட் பேட் அக்லி படத்தின் கேரளா ரைட்ஸ்.. இத்தனை கோடிக்கு வியாபாரம்  செய்கிறார்களா

 

இப்படியான நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆவதற்கு முன்பு ஏப்ரல் ஒன்பதாம் தேதி சென்னை மட்டுமல்லாமல் கோயம்புத்தூர் மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் பெய்டு ப்ரீமியர் செய்ய படக் குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சில தயாரிப்பாளர்கள் கூறிய அறிவுரையை ஏற்று அது தற்போது கேன்சல் செய்யப்பட்டுள்ளது. அதாவது முதல் நாள் படத்தை ரிலீஸ் செய்யும் போது வரக்கூடியவர்கள் காட்சிகளையும் பேசக்கூடிய டயலாக்குகளையும் துண்டு துண்டாக எடுத்து செல்போனில் போட்டால் அது படத்தின் வசூரில் மிகப்பெரிய அடிவாங்கி தோய்வை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் இந்த முயற்சியை கைவிட்டு உள்ளனர்.

ஆக்சன் மட்டும் இல்ல இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு.. குட் பேட் அக்லி ஆதிக் சொன்ன  சீக்ரெட், அந்தப் பட வாடை வருதே - Cinemapettai

அதே சமயம் ஏப்ரல் பத்தாம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் அரசிடம் கோரிக்கை விடுத்து ஒன்பது மணிக்கு சிறப்பு காட்சியை போட்டு விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் மற்றொரு முக்கிய காரணம் என்னவென்றால் அஜித் நடித்த வீரம், வேதாளம் மற்றும் விசுவாசம் ஆகிய படங்கள் அனைத்தும் ஏப்ரல் பத்தாம் தேதி தான் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இந்த படத்தையும் இயக்கும் முயற்சியில் ஏப்ரல் 10ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்