தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் முதலில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில், கமல்ஹாசன் நாயகனாக நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு திடீரென ஹீரோவாக அறிமுகமாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவர் முதன்முதலில் ஜெயம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் தனது தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் இருந்த நிலையில் தற்போது ஆட்சியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் அவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை வெளியிடவில்லை.

ஆனால் பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியில் விவாகரத்துக்கான காரணத்தை கூறியுள்ளார். அதாவது ஆர்த்தியின் அம்மா சுஜாதாவுக்கு சங்கர் என்ற வளர்ப்பு மகன் உள்ளார். சுஜாதா நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தை அந்த வளர்ப்பு மகன்தான் நிர்வகிக்கிறார். அண்மையில் ஜெயம் ரவியை வைத்து தங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் படம் எடுக்க இருந்த சுஜாதா தன்னுடைய வளர்ப்பு மகன் சங்கர் சொல்வதை ரவி கேட்டு நடக்க வேண்டும் என கூறியுள்ளார். இது ரவிக்கு பிடிக்காததால் தன்னுடைய மனைவியிடம் சண்டையிட்டு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை பெரிதாகியுள்ளது. இதனால் இருவரும் பிரிந்ததாக அவர் கூறியுள்ளார்.

அதனைப் போலவே பயில்வான் ரங்கநாதன் நடித்த பேட்டியில், ஜெயம் ரவி தன்னுடைய மாமியார் நடிப்பில் இறுதியாக நடித்த சைரன் படம் முதலுக்கு மோசம் இல்லாமல் தப்பித்ததாகவும் அதன் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனதால் இதையும் அவர் மாமியார் தான் தயாரிப்பதாக இருந்ததாகவும் அந்த படத்திற்கு ரவி 25 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அவருடைய மாமியார் உங்களுக்கு அவ்வளவு மார்க்கெட் இல்லை என்று சொல்லியும் ரவி கேட்காததால் இறுதியில் கொடுக்க சம்மதித்து விட்டு படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லி இயக்குனருக்கு சுஜாதா அழுத்தம் கொடுத்துள்ளார். இதனால் பாண்டிராஜ் படத்திலிருந்து விலக இந்த செய்தி ஜெயம் ரவிக்கு தெரிய வர அவர் தன் பட வாய்ப்பு பறிபோனதற்கு உன் அம்மா தான் காரணம் என்று மனைவியிடம் சண்டையிட்டதால் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
