5 ஆண்டுகளாக உறவு.. திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய RCB அணி கிரிக்கெட் வீரர்… வெளியான பரபரப்பு ஆதாரங்கள்..!

By Nanthini on ஆனி 29, 2025

Spread the love

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆர் சி பி அணியின் வீரர் யாஷ் தயாள் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த யாஷ் தயாள் 2025 ipl தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். இதைத் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தி இருந்தார். இப்படியான நிலையில் இவர் மீது பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூன் 14ஆம் தேதி பெண்களுக்கான 181 என்ற உதவி எண்ணில் புகார் அளித்துள்ளார்.

விராட் கோலி கையொப்பமிட்ட சிறப்பு தொப்பியுடன் ஆர்சிபி நட்சத்திரம் யாஷ் தயாள்  போஸ் கொடுத்துள்ளார்  | ஒரு கிரிக்கெட்

   

இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இணைய மூலமாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஜூலை 21ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அலுவலகம் முத்தரவிட்டுள்ளது. அந்தப் பெண் அழித்த முதல் தகவல் அறிக்கையில், யார் தயாள் திருமணம் செய்வதாக கூறி என்னிடம் ஐந்து ஆண்டுகளாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் என்னை பயன்படுத்தி ஏமாற்றி விட்டார், அவரது குடும்பத்தினரிடம் என்னை மருமகள் என அடையாளப்படுத்தியதால் அவரை நம்ப தொடங்கினேன்.

   

Yash Dayal

 

அவர் நிதி ரீதியாகவும் என்னை பயன்படுத்திக் கொண்டார். அவரின் நோக்கம் தெரிந்து விலக முயற்சித்த போது என்னை கடுமையாக தாக்கினார். மேலும் இதே போல பல பெண்களை அவர் ஏமாற்றியது தெரியவந்துள்ளது என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பல ஆதாரங்களை அந்தப் பெண் இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

🐦‍🔥 பதிவைப் பகிர்ந்துள்ளார் (@ujju.64)