இன்றைய காலகட்டத்தில் அனைவருமே பெரும்பாலும் வங்கி கணக்குகள் வைத்துள்ளனர். ஒரு சிறிய தேவைக்கு கூட வங்கி கணக்கு என்பதை மிக முக்கியமானதாக உள்ளதால் அனைவரும் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளன.
இந்நிலையில் RBI பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் நவம்பர் 20 நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின் படி செயல்படாத கணக்குகள், செயலற்ற கணக்குகள் மற்றும் இருப்பு இல்லாத கணக்குகள் (ஜீரோ பேலன்ஸ் கணக்குகள்) ஆகியவை முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகையான கணக்குகள் மோசடி அல்லது தவறான பயன்பாட்டிற்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
