இந்தியாவில் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கடந்த ஆண்டை விட 11.2% அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது 2025-26 நிதியாண்டுக்கான ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போதைய நிதியாண்டில் மட்டும் சுமார் 35.27 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 7.05 லட்சம் கோடி எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பணப் புழக்கத்தில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே மதிப்பு ரீதியாக 86% மற்றும் எண்ணிக்கை ரீதியாக 41.2% என்ற பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன.
அதே நேரத்தில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் 20% க்கும் மேல் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளால் கண்டறியப்பட்ட ஒட்டுமொத்த கள்ள நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே 61.8% பங்கை வகிப்பதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன. இதனால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பணப் பரிவர்த்தனைகளின் போது 500 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்த்து, எச்சரிக்கையுடன் கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
