“விஜய் ஒன்றும் அவதார புருஷரோ, கடவுளோ அல்ல”…. தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்… அதிரும் தமிழக அரசியல்….!

Spread the love

தமிழகத்தை இரட்சிக்க வந்த கடவுளோ அல்லது அவதார புருஷரோ விஜய் கிடையாது என்றும், தற்காலிகமாகப் பெற்றுள்ள அதிகாரத் திமிரால் தலைகால் புரியாமல் ஆடும் த.வெ.க அரசின் ஆட்டத்திற்குத் தமிழக மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தற்போதைய த.வெ.க அரசு மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், அதிமுகவை முடக்குவதிலேயே குறியாக இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாடியுள்ளார்.

தமிழகத்தில் காவிரியிலிருந்து ஜூலை மாதத்திற்குப் பெற வேண்டிய 32 டி.எம்.சி தண்ணீரைத் தராமல் கர்நாடக அரசு வஞ்சிப்பதோடு, மேகதாது அணை பணிகளையும் தொடங்கியுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் வறட்சியை நோக்கிச் நகர்வதோடு, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் முரண்பாட்டால் தென் மாவட்ட விவசாயிகளும் துயரத்தில் உள்ளனர். மறுபுறம், கடந்த இரண்டு மாதங்களாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையிலும், அதனைத் தடுத்து நிறுத்தாமல் த.வெ.க அரசு அமைதி காப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களுக்கான அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, கடந்த 52 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வரும் பேரியக்கமான அதிமுகவை முடக்கவும், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தனிமைப்படுத்தவும் ஒரு ரகசியத் திட்டம் அரங்கேறி வருகிறது. அரசியல் மரபுகளை மீறி, எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்காமல் அதிமுக எம்.எல்.ஏ-க்களை மட்டும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விஜய் சந்தித்தது ‘ஆடு பகை குட்டி உறவு’ என்ற பழமொழியை நினைவூட்டுகிறது. அதிமுகவினர் எடப்பாடியாரோடு உறுதியாக நின்றதால் அதிர்ந்துபோன விஜய், குதிரை பேரத்தில் ஈடுபட்டு இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தூக்கி, ராஜினாமா செய்ய வைத்துள்ளதாகவும், இன்னும் 12 பேரை குறிவைத்துள்ளதாகவும் உதயகுமார் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் பின்புலமோ அல்லது சினிமா வசீகரமோ இல்லாமல், உழைப்பால் உயர்ந்த எளிய விவசாயியான எடப்பாடியாரைத் தனிமைப்படுத்திவிட்டால், த.வெ.க-வை தேசிய அளவில் வளர்த்துவிடலாம் என தொடர்ந்து சீண்டி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் அதிமுகவை ‘அல்லு சில்லுகள்’ என்று ஆணவத்தின் உச்சியில் விஜய் விமர்சித்ததை மக்கள் மறக்கவில்லை. காலம் எப்போதும் இப்படியே இருக்காது என்றும், அரியாசனம் கிடைத்துவிட்டது என்பதற்காகத் தலைகால் புரியாமல் ஆடும் விஜய்க்கு, காலம் மாறும்போது தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

33 minutes ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

45 minutes ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

1 மணத்தியாலம் ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

2 மணத்தியாலங்கள் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

2 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago