சளி முதல் கொலஸ்ட்ரால் வரை… உடம்பில் இருக்கும் அத்தனை பிரச்சனைக்கும் ஒரே தீர்வு… தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுங்க போதும்…!

By Nanthini on கார்த்திகை 6, 2025

Spread the love

பொதுவாகவே நம் உணவில் பூண்டு என்பது ஒரு தனித்துவமான சுவையை உண்டாகும். பூண்டு அதன் தனித்துவமான சுவை மற்றும் சக்தி வாய்ந்த சுகாதார நன்மைகளுக்காக சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனை சிலர் பச்சையாகவும் வதக்கியும் ஊறுகாய் செய்தும் பல வழிகளில் சாப்பிடுவார்கள். ஆனால் பச்சையான பூண்டை அப்படியே சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று பலருக்கும் கேள்வி இருக்கும். 30 நாட்கள் தொடர்ந்து பச்சை பூண்டை அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் மாற்றங்களை நீங்களே நம்ப மாட்டீர்கள். தினம்தோறும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் அதிக அளவிலான மருத்துவ குணங்கள் உள்ளது. பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சாதாரண சளியில் இருந்து கொலஸ்ட்ரால் வரை பூண்டு ஒரு அருமையான மருந்தாகும். பலருக்கு இதன் வாசனை பிடிக்காததால் பூண்டு சாப்பிடுவதை புறக்கணிக்கிறார்கள். ஆனால் இதில் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட் ஆகும். இது நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடும். இதனை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும். பூண்டு ஆரோக்கியம் என்றாலும் ஒரு நாளைக்கு 1 முதல் 2 பூண்டு பற்கள் சாப்பிடுவது பாதுகாப்பானது.

   

பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது சாலட், பிரட்டில் வைத்து சாப்பிடலாம். தேனுடனும் வைத்து சாப்பிடலாம். ஆனால் உடலில் சில பிரச்சனைகள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்து பூண்டை பச்சையாக சாப்பிடலாம். குறிப்பாக கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் இந்த பச்சை பூண்டை தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட முன்னர் அல்லது பச்சை பூண்டு சாப்பிட வேண்டும் என்றால் மருத்துவ ஆலோசனை கேட்க வேண்டும். அப்படி கேட்டுக் கொண்டு பூண்டு சாப்பிட்டால் உடலில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.