அதிர்ந்த தமிழக அரசியல்… ஆச்சரியப்பட்ட அஸ்வின்.. TVK-யின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இணைந்த கிரிக்கெட் உலகம்..!!

By Swetha on வைகாசி 5, 2026

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிடக் கட்சிகளின் பிம்பத்தை உடைத்து, ஒரு புதிய அரசியல் சக்தியாக டிவிசி உருவெடுத்துள்ளது ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த அபார வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் (X) தளத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “அற்புதமான முடிவு”  என்று டிவிசியின் வெற்றியைப் பாராட்டியுள்ள அவர், ஒரு புதிய கட்சியின் இந்த எழுச்சி ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டைத் தாண்டி சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளில் எப்போதும் கருத்து தெரிவிக்கும் அஸ்வினின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

   

திமுக 73 இடங்களையும், அதிமுக 53 இடங்களையும் பெற்றுள்ள நிலையில், டிவிசி 108 இடங்களுடன் முதலிடத்தில் உள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அஸ்வின் மட்டுமல்லாமல் திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் விஜய்யின் இந்த ‘மெகா’ வெற்றியைப் பாராட்டி வருகின்றனர்.