பிரபல நடிகரான ரவி மோகன் ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு உனக்கும் எனக்கும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபகாலமாக ரவி மோகன் நடிப்பில் ரிலீசாகும் படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
மறுபுறம் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் தனது நெருங்கிய தோழி கெனிஷாவை காதலித்து வருவதும் உறுதியானது. இருவரும் நேற்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவி, ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
இதன் அறிமுக விழா இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசனை அவரது வீட்டிற்க்கே சென்று ரவி மோகன் அழைத்துள்ளார். அவருக்கு சிங்கத்தின் மேல் கமல் அமர்ந்து சவாரி செய்வது போல ஒரு புகைப்படத்தையும் அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.
![]()
