கோலிவுட் திரையுலகில் எப்போதும் அமைதியான, புன்னகை மன்னனாக வலம் வந்த நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), தற்போது தனது மனைவி ஆர்த்தி உடனான விவாகரத்து விவகாரத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, செய்தியாளர்கள் முன் கண்ணீர் விட்டு பேசியிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடகி கெனிஷாவுடனான நட்பு இந்தச் சிக்கலை மேலும் பெரிதாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், கெனிஷா தன்னை விட்டு விலகுவதாக அறிவித்த மறுநாளே ரவி இந்த பேட்டியை அளித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உடைப்பு ஒருபுறமிருக்க, தனது 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை நரகமாக இருந்ததாகவும், அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடிவந்ததாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தனது முந்தைய திருமண வாழ்க்கையில் சந்தித்த அவமானங்களையும் வலிகளையும் வெளிப்படுத்திய ஜெயம் ரவி, தான் இரண்டு வருடங்களாக அமைதியாக இருந்ததையே எல்லாரும் பலவீனமாக நினைத்துக்கொண்டு தன்னிடம் விளையாடிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “பிரச்சனைகள் ஆண்களுக்கும் வரும், பிரபலமாக இருப்பதால் கஷ்டங்களை வெளியே சொல்லக் கூடாது என்பதில்லை” என்று கூறிய அவர், கஷ்டப்படும் ஆண்களுக்குத் தான் துணையாக நிற்பேன் என்றும் தைரியம் அளித்துள்ளார். மேலும், தனக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையோ, சொந்த வங்கிக் கணக்கோ கூட இல்லை என்றும், ஒரு சிறிய பொருள் வாங்கினால் கூட வீட்டில் நிம்மதி இல்லாமல் கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டதாகவும் தனது வேதனையைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு மனிதநேயத்தோடு துணையாக நின்றவர் கெனிஷா மட்டும்தான் என்றும், ஆனால் சமூக வலைதள அவதூறுகள் (Social Media Bullying) மூலம் அவரையும் தன்னை விட்டு விலகச் செய்துவிட்டார்கள் என்றும் ரவி வருத்தமடைந்தார். அதே வேளையில், தமக்கு ஆதரவாக நின்ற நடிகர் கார்த்தி உண்மையான நண்பன் என்று பாராட்டிய அவர், “நீ ரொம்ப நல்லவன்டா” என்று கார்த்தி கூறிய வார்த்தைகள் தனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததாகக் குறிப்பிட்டார். தனது குழந்தைகளே தனது உலகம் என்று உருகிய ரவி, அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் கட்டி படிக்க வைத்தும், தற்போது அவர்களைப் பார்க்கவோ, போனில் பேசவோ கூட அனுமதிக்காதது தன்னை முற்றிலுமாக உடைத்துவிட்டதாகக் கண்ணீர் மல்கக் கூறினார்.
இந்த மனரீதியான அழுத்தங்கள் காரணமாக, விவாகரத்து வழக்கு முடியும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும், நிஜ வாழ்க்கையில் தம்மால் நடிக்க முடியாது என்றும் ஜெயம் ரவி அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், தன் வாழ்க்கையை அழிக்க நினைத்த சூழ்ச்சிக்காரர்கள் யார் என்பதை இந்த உலகம் விரைவில் தெரிந்துகொள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுவரை அமைதியாக இருந்த ஒரு நடிகர் இவ்வளவு தூரம் உடைந்து பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், ஆர்த்தி ரவி தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் வரப்போகிறது என்பதை ஒட்டுமொத்த கோலிவுட்டும் உற்று நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மொராதாபாத் பகுதியில் ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அரிய மருத்துவ நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சம்பல்…
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி நீங்குவதற்குள்,…
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக பெரும் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது…
நடிகர் விஜய் மீதான தனது தீவிர பற்று மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததால் திரைத்துறையில் தான்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான சமாதான பேச்சுவார்த்தையில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பிரம்மாண்ட…
தமிழக முதலமைச்சராக கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட விஜய் மற்றும் அவருடன் பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்)…