என்கிட்ட எதையும் மறைக்காதீங்க… தேர்தல் தோல்விக்கு பின் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!

Spread the love

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக பெரும் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியிலேயே சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, 234 தொகுதிகளிலும் கள ஆய்வு செய்வதற்காக 36 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

ஆய்வுக் குழுவினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், இந்த ஆய்வின் போது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி தொண்டர்கள் சொல்லும் உண்மையை அப்படியே தன்னிடம் கூற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். “யாரையும் காப்பாற்றவோ அல்லது பழிவாங்கவோ முயற்சிக்கக் கூடாது; ஒரு மருத்துவர் போல நான் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் தலைவர் என்ற முறையில் தன் மீது குறை சொன்னாலும் அதையும் அறிக்கையில் துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கறாராகக் கூறியுள்ளார்.

கழகத்தினர் அளிக்கும் தகவல்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்றும், இந்தத் தகவல்களைச் சம்பந்தப்பட்ட நபர்களிடமே பகிர்ந்துகொண்டால் ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், இந்த ‘ஸ்கேன் ரிப்போர்ட்’ போன்ற துல்லியமான அறிக்கை ஜூன் 5-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் ஜூன் மாத இறுதிக்குள் தவறு செய்த நிர்வாகிகள் மீது கடுமையான சீர்திருத்த நடவடிக்கைகளும், மாற்றங்களும் எடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

“டிசிஎஸ் சிஇஓ-வின் ஒரு வருட சம்பளம் இத்தனை கோடியா?… வெளியான தலைசுற்ற வைக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கை”…!!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) வெளியிட்டுள்ள புதிய ஆண்டு அறிக்கையின்படி, அதன் தலைமை…

9 minutes ago

“சுவீடனில் நான் வாங்கிய பட்டம்… உங்களால் தான்!”.. தமிழக மாணவனின் உருக்கமான பதிவு… மு.க.ஸ்டாலினின் நெகிழ்ச்சியான பதில்…!!!

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர், சுவீடன் நாட்டில் உள்ள உலகின் முன்னணி…

21 minutes ago

“விஜய் ஆக்‌ஷன் மோட்..! பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிக்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!”

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து, அதனை முழுமையாக ஒழிப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு…

30 minutes ago

தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்..! முதலமைச்சர் விஜய் ஆளுநரிடம் கொடுத்த ரகசியப் பட்டியல்… உள்ளே இருக்கும் புதிய முகங்கள் யார்..?

தமிழ்நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அமைச்சர்கள் பட்டியலை, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தற்போதைய ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். தமிழக…

30 minutes ago

“ப்ளீஸ்.. விஜயோடு என்னை ஒப்பிடாதீங்க!”… ரசிகர்களின் டார்ச்சரால் ஓப்பனாக கதறிய பவன் கல்யாண்…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய்…

37 minutes ago

“டாக்டர்களே வாயடைச்சு போயிட்டாங்க… சிசேரியன் இல்ல.. வெறும் சுகப்பிரசவம் தான்… 4 குழந்தைகளை அசாத்தியமாக பெற்றெடுத்த 31 வயது தாய்.. குவியும் வாழ்த்துகள்!

உத்தரப் பிரதேசம் மொராதாபாத் பகுதியில் ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அரிய மருத்துவ நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சம்பல்…

48 minutes ago