“ப்ளீஸ்.. விஜயோடு என்னை ஒப்பிடாதீங்க!”… ரசிகர்களின் டார்ச்சரால் ஓப்பனாக கதறிய பவன் கல்யாண்…!!!

Spread the love

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இச்சூழ்நிலையில், விஜய்யின் இந்த அதிரடி அரசியல் வளர்ச்சி அண்டை மாநிலமான ஆந்திராவின் துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாணுக்கு ஒரு புதிய அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களகிரியில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், விஜய் முதலமைச்சரானதில் இருந்து ஆந்திர மக்கள் தனக்குக் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். பவன் கல்யாணின் அண்ணனும் மூத்த நடிகருமான சிரஞ்சீவி, விஜய்க்குத் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், பவன் கல்யாணின் இந்த ஆதங்கப் பேச்சு சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய பவன் கல்யாண், “அண்டை மாநிலத்தில் ஒரு நடிகர் தனியாகக் கட்சி தொடங்கி, நேரடியாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அதை முன்வைத்து, ஆந்திராவிலும் நான் ஏன் தனித்துப் போட்டியிட்டு முதலமைச்சர் நாற்காலியைப் பிடிக்கவில்லை என்று பலரும் எனக்கு மெசேஜ் அனுப்பி அழுத்தம் தருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இதைப் பார்க்கும்போது பக்கத்து வீட்டுத் திருமணத்திற்கு நம் வீட்டுச் சிறுவர்கள் விவரம் தெரியாமல் ஓடித் திரிவது போல உள்ளது; ஆந்திராவின் அரசியல் சூழலே வேறு. நான் 2019 தேர்தலில் போட்டியிட்டபோது எனக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை, அந்த அனுபவம்தான் எனது பாதையை விஜய்யின் சமீபத்திய வளர்ச்சியுடன் ஒப்பிட முடியாத ஒன்றாக மாற்றுகிறது” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் கடந்த 2014-ல் ஜனசேனா கட்சியைத் தொடங்கினாலும், 2019 பொதுத்தேர்தலில்தான் 140 தொகுதிகளில் தனித்துக் களம் கண்டார். ஆனால், அதில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அவரது கட்சி வென்றதுடன், பவன் கல்யாண் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே தோல்வியடைந்தார். இந்த கசப்பான அனுபவத்திற்குப் பிறகே, கடந்த 2024 தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 21 இடங்களில் வென்றார். இதன் மூலமே அவருக்குத் தற்போது துணை முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது என்பதால், கட்சி தொடங்கிய உடனேயே தனித்து நின்று ஆட்சியைப் பிடித்த விஜய்யின் வெற்றியோடு தன் அரசியல் பயணத்தை ஒப்பிட வேண்டாம் என்று பவன் கல்யாண் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Muthu Mani

Recent Posts

சிஎம் சார், என் மனைவியைக் காப்பாத்துங்க..! கதறிய நடிகர் முத்துக்காளை.. அடுத்த நிமிடமே களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான முத்துக்காளை, இன்று காலை தனது மனைவியின் உடல்நிலை குறித்து கண்ணீருடன் வீடியோ ஒன்றை…

5 minutes ago

தமிழக பட்ஜெட்: தகுதியுள்ள மகளிருக்கு ரூ.2,500 நிதியுதவி திட்டம் உறுதியானது..!!

தமிழக பட்ஜெட்டில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை செப்டம்பர் அல்லது நவம்பர் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்…

21 minutes ago

தூக்கக் கலக்கத்தால் வந்த வினை..! அதிவேக கார் விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. ஓட்டுநர்களே எச்சரிக்கை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் நேரிட்ட மிகக் கொடூரமான சாலை விபத்தில் இரண்டு பெண்கள்…

22 minutes ago

குழந்தைகளின் படிப்புச் செலவுக்குப் பணம்… ஜெயம் ரவிக்கு எதிராக ஆர்த்தி தொடர்ந்த வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப…

26 minutes ago

பக்திக்கு எல்லை இல்லை.. ஓடும் இரயிலையே பூஜை அறையாக மாற்றிய பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

நகரும் இரயிலில் பயணித்த பெண் ஒருவர், பாரம்பரிய 'வட் சாவித்திரி' பூஜையை இரயிலின் உள்ளேயே செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி…

30 minutes ago

புதிய வீடு மாறும் முதல்வர் விஜய்… என்ன காரணம் தெரியுமா..? வெளியான தகவல்.!!

நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து சென்னை கோட்டை தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் விஜய் தினமும் பயணிப்பதால், சுமார் 17 கிலோமீட்டர்…

31 minutes ago