“ஜனநாயகன் ரிலீஸ் தான் எங்களுக்கு உண்மையான பொங்கல்”… இதயம் கனக்கிறது விஜய் அண்ணா… நடிகர் ரவிமோகன் வேதனையுடன் வெளியிட்ட பதிவு…!

Spread the love

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு ஆகியோர் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக அரசியலில் நுழைந்துள்ள விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் இதுதான். இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. எனவே தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது.

படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் காட்சிகள் உள்ளதாகவும் அதனை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் என்றும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனால் இதுவரை படத்துக்கு சான்றிதழ் கிடைக்காததால் நாளை படத்தை ரிலீஸ் செய்வது முடியாத காரியம் என்பதால் படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஒருபுறம் சோகத்தில் இருக்க மறுப்பக்கம் நடிகர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அரசியல் பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரவி மோகன் ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து வருத்தம் தெரிவித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இதயம் கனக்கிறது விஜய் அண்ணா… உங்களுடைய கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக ஒரு சகோதரனாக நான் உங்கள் பக்கம் நிற்கின்றேன். உங்களுக்கு என்று ஒரு வெளியிட்ட தேதி தேவையில்லை. நீங்கள் திரையில் தோன்றுவது தான் உண்மையான ஓப்பனிங். அந்த தேதி எதுவாக இருந்தாலும் சரி அன்றைக்கு தான் எங்களுக்கு பொங்கல் ஆரம்பம் என்று ரவி மோகன் தெரிவித்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

BIG BREAKING: முதல் வேட்பாளராக அறிவிப்பு…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வர…

22 minutes ago

#BREAKING : பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்… சற்றுமுன் அறிவிப்பு…!

பராசக்தி திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜனநாயகன்…

35 minutes ago

“ஐயோ அம்மா வலிக்குது”… 5 வயது பிஞ்சு குழந்தைக்கு அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த சித்தி… கேரளாவில் நடந்த கொடூரம்…!

கேரளாவில் படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக ஐந்து வயது சிறுமிக்கு பிறப்புறுப்பில் அவருடைய சித்தி சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

39 minutes ago

போடு வெடிய… சற்றுமுன் ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு… விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்…!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி…

49 minutes ago

விசிக இருக்கும் கூட்டணியில் பாமக?… ஒரே போடாய் போட்ட ராமதாஸ்… யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்…!!

தமிழக அரசியலில் நிலவிவரும் கூட்டணி கணக்குகளில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது…

1 மணத்தியாலம் ago

தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்கிய பாஜக எம்எல்ஏ… பரபரப்பை கிளப்பும் ஷாக்கிங் வீடியோ…!

பாஜக எம் பி யும் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சருமான ஜோதிராதித்யா இந்தியாவின் மகன் காலில் 73 வயது பாஜக…

1 மணத்தியாலம் ago