Connect with us

பிக் பாஸ் மணி-ரவீனா காதல் விவகாரம்…. முதல் முறையாக மனம் திறந்த ரவீனாவின் தாயார்…. வைரலாகும் பேட்டி….!!!

CINEMA

பிக் பாஸ் மணி-ரவீனா காதல் விவகாரம்…. முதல் முறையாக மனம் திறந்த ரவீனாவின் தாயார்…. வைரலாகும் பேட்டி….!!!

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஏழாவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. பிக் பாஸ் 7 விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. அனன்யா முதல் வாரம் வெளியேறியதை தொடர்ந்து பாவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறிய விட்டார்.

   

ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் ஜோடி, பாடகர்கள், மாடல், நடிகர்கள், பஞ்சாயத்து என தொடர்ந்து குறைவில்லாமல் இருக்கும். அதே போல இந்த சீசனில் காதல் ஜோடி என கிசுகிசுக்கப்பட்ட நடன கலைஞர்களான ரவீனா மணிசந்திரா ஜோடி தற்போது உள்ளே நுழைந்து இருக்கிறார்கள். இந்த போட்டியாளர்கள் பற்றி தான் பலரும் பேசி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவர் பற்றியும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்நிலையில் ரவீனாவின் தாயார் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தனது மகள் குறித்து பல விஷயங்களை கூறியிருந்தார்.

மேலும் தொகுப்பாளர் ரவீனா மற்றும் மணி இருவருக்கும் இடையே உள்ள உறவு பற்றி கூறிய போது இருவரும் நல்ல நண்பர்கள் தான். எப்படி என்றால் இருவரும் அடித்து சண்டை போடும் அளவிற்கு நல்ல நண்பர்கள். அவர்கள் வெளியில் ரீல் செய்து கொண்டிருந்த போதும் கூட பலரும் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறி வந்தார்கள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்று நான் ரவீனாவிடம் அடிக்கடி கூறிக்கொள்வேன். அதேதான் இப்போதும் கூறுகிறேன் என்று அவர் பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top