லஞ்சப் பணத்தை கடித்து தின்ற எலிகள்… பிஹார் பெண் அதிகாரிக்கு ஜாமீன்… இதென்ன ஏமாந்து வேலை..? உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி..!!

By Soundarya on சித்திரை 26, 2026

Spread the love

பிஹார் ஊழல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லஞ்சப் பணத்தைச் எலிகள் கடித்து சிதைத்ததாகக் கூறப்பட்ட விசித்திரமான சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட பெண் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 2014-ஆம் ஆண்டு ₹10,000 லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட குழந்தை மேம்பாட்டுத் திட்ட அதிகாரி அருணா குமாரிக்கு, பாட்னா உயர் நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, காவல் நிலைய ‘மல்கானா’வில் வைக்கப்பட்டிருந்த லஞ்சப் பணம் எலிகளால் கடிக்கப்பட்டு அழிந்துவிட்டதாகக் கூறப்பட்டதைக் கேட்டு நீதிபதிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது அரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பறிமுதல் செய்யப்படும் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் உள்ள அலட்சியம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, எலிகள் பணத்தைச் சிதைத்ததாகக் கூறப்படும் விளக்கம் தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.