போடு ரகிட ரகிட…. இனி ரேஷன் கடைக்கு போகவே வேண்டாம்…. உங்க கார்டுல இந்த 2 பேர் பெயர் இருந்தா போதும்…. தமிழ்நாடு அரசின் புதிய பிளான்….!

By Nanthini on ஆடி 29, 2026

Spread the love

தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து, தற்போது கைம்பெண்களுக்கும் இச்சேவையை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. அத்துடன் முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்றோர் மற்றும் திருநங்கையரின் வீடுகளுக்கே நேரடியாகப் பொருள்களை வழங்குவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் பயனடைய மேலே குறிப்பிட்ட நபர்களின் ரேஷன் கார்டில் 60 அல்லது 65 வயதைக் கடந்த இருவரின் பெயர்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட உள்ளது. எளிய மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் இத்திட்டம், கடைகளுக்குச் சென்று வர இயலாத நிலையிலிருக்கும் பலருக்குப் பெரும் உதவிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.