காரைக்கால் சேர்ந்த மீனவர்கள் கடந்த 29-ஆம் தேதி கடலுக்கு சென்று நான்கு நாட்கள் தங்கி மீன் பிடித்தனர். அந்த மீனவர்களின் வலையில் 50க்கும் அதிகமான பெரிய கூரை கத்தாழை மீன்கள் சிக்கி உள்ளது. இந்த வகை மீன்கள் சிக்குவது அரிதான விஷயம். இந்த வகை மீன்கள் மருத்துவத்திற்கு அதிகம் உபயோகப்படுகிறது. இவை ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும்.
துறைமுகத்தில் விற்பனைக்காக மீன்கள் வைத்த உடனே வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். புயல் எச்சரிக்கை பிறகு 200க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர் ஆனால் காரைக்கால் மீனவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
