ஐயோ… அக்கவுண்ட்டையே காலி செய்த ராபிடோ கட்டணம்… ரூ 4,182 போனது உண்மையா?… ராபிடோவில் நடந்த பேரதிர்ச்சி… கடைசியில் நடந்த ட்விஸ்ட் என்ன?…

By Swetha on ஆடி 28, 2026

Spread the love

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், சந்தையில் இருந்து தனது இருப்பிடத்திற்குச் செல்ல ராபிடோ செயலியில் வண்டி பதிவு செய்தார். ஓட்டுநர் மிகவும் மரியாதையுடனும் பண்புடனும் நடந்து கொண்டு, 2 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு அவரைப் பாதுகாப்பாக இலக்கில் இறக்கிவிட்டார்.

பயணம் முடிந்ததும் அப்பெண் பணத்தைச் செலுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றார். ஆனால், 10 நிமிடங்களுக்குப் பிறகு தனது கைப்பேசியைச் சோதித்துப் பார்த்தபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. பயணத்திற்கான உண்மையான கட்டணமான ரூ 73-க்கு பதிலாக, அவரது கணக்கிலிருந்து ரூ 4,182 பிடித்தம் செய்யப்பட்டிருந்தது.

   

உடனடியாக அவர் அந்த ராபிடோ ஓட்டுநரைத் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறினார். ஓட்டுநரும் கணக்குகளைச் சரிபார்த்து, தவறுதலாகப் பெறப்பட்ட கூடுதல் தொகையை எவ்விதத் தயக்கமும் இன்றி அவரிடம் நேர்மையுடன் திருப்பிக் கொடுத்தார். அந்த ஓட்டுநரின் உண்மைத் தன்மையும், கனிவான குணமும் அப்பெண்ணைக் பெரிதும் நெகிழ வைத்ததோடு, அவரது மனமார்ந்த பாராட்டையும் பெற்றது.