BREAKING: தமிழகத்தை மிரட்டும் டெங்கு காய்ச்சல்….. ஒரே நாளில் வந்த ஷாக்கிங் ரிப்போர்ட்…. உச்சக்கட்ட அலெர்ட்…!

By Nanthini on புரட்டாதி 22, 2026

Spread the love

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 228 பேருக்கு டெங்கு பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17,000 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளால் தீவிரமடைந்து வரும் இந்த நோய் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் உள்ளாட்சி அமைப்புகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

   

இந்நிலையில், டெங்கு பரவலைத் தடுக்க உடனடியாகக் களத்தில் இறங்கி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் ஆதாரங்களைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக அழிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசு ஒழிப்பு மருந்துகளைத் தெளித்தல், தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்துதல் மற்றும் காய்ச்சல் தடுப்பு முகாம்களை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளைத் தடையின்றி முன்னெடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதல்வர் ஆணையிட்டுள்ளார்.