முதல்ல தார்ஷிகா, இப்போ அன்ஷிதா… விஷாலின் நாடகக் காதல் குறித்து உண்மையை சொன்ன ரஞ்சித்..!

By Soundarya on மார்கழி 31, 2024

Spread the love

விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது 82 நாட்களை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.  கடந்த வாரம் Freeze டாஸ்க் என்பதால் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தார்கள். குடும்பத்தினர் வாரம் என்பதால் மிகவும் எமோஷனலாகவே சென்றது. அது மட்டுமல்லாமல் யாரும் எதிர்பாரா விதமாக போட்டியாளர்களின் நண்பர்கள் உள்ளே வந்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. போன வாரம் விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் பல எதிர்பார்ப்புகள் இருந்தது.

   

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று தகவல் வெளிவந்த நிலையில் விஜய் சேதுபதி Eviction கார்டோடு வந்து ஒருவரை விக்ட் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று கூறினார். இதனை தொடர்ந்து போட்டியாளர் ஜெஃப்ரி, அன்ஷிதா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இப்படியான நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது போட்டியாளர் தர்ஷிகாவிடம் விஷால் காதல் என்ற பெயரில் கேம் விளையாடினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு நடந்தது எல்லாமே ஒரு நாடகம் என்று புரிந்து கொண்ட தர்ஷிகா, அந்த வீட்டிலேயே என்கிட்ட நடித்த சிறந்த நடிகர் விஷால் தான் எனவும் என்னை பாசத்தை காட்டி அடித்து விட்டார்கள் எனவும் கூறி இருந்தார்.

   

 

அது மட்டுமல்லாமல் விஷால் என்னை மொக்க மூஞ்சி என்று சொன்னது எல்லாம் நான் வெளியில் வந்து தான் பார்த்தேன். அதே விஷால் நான் வீட்டுக்குள் இருக்கும்போது அழகாக இருக்கேனு பலமுறை சொன்னார். என் முகத்திற்கு முன்னால் ஒன்று சொல்லி எனக்கு பின்னால் நிறைய பேசியுள்ளார். எது உண்மை என்று எனக்கு தெரியல என்று வருத்தத்துடன் பேசி இருந்தார். இதற்கிடையில் தற்போது அன்ஷிதாவிடம் விஷால் வீட்டை விட்டு வெளியேறும் முன்பாக கார்டன் ஏரியாவில் அன்சிதாவின் தோள்மேல் கை போட்டுக்கொண்டு விஷால், நாளைக்கு ஒருவேளை நான் வெளியில போய்ட்டா கூட நீ என்ன மறந்துராத.

நல்லா கேம் விளையாடிட்டு வெளியே வா உனக்காக நான் காத்துட்டு இருக்கேன் என்று கூறினார். வெளிப்படையாக தனது காதலை அவர் வெளிப்படுத்தாமல் மறைமுகமாகவே அன்சிதாவிடம் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய ரஞ்சித் விஷாலின் இந்த காதல் குறித்து பேசுகையில், அவரிடம் விஷாலின் நாடக காதல் தெரியுமா என்று கேட்க, அதற்கு ரஞ்சித்,  “இதெல்லாம் நல்லாவே இல்ல. முதல்ல விஷால் தர்ஷிகாவிடம் பழகும் போது உண்மையான லவ்ன்னு நினச்சேன். தர்ஷிகா ரொம்ப நல்ல பிளேயர். திறைமையானவரும் கூட .அவங்க எப்படி காதலில் விழுந்தாங்கன்னு எனக்கு தெரியல. விஷால் இப்போ அன்ஷிதாவிடம் அதே மாதிரி நடந்திருக்காரு. நான் வெளியே வந்து தான் பார்த்தேன். தர்ஷிகா பேட்டியை பார்த்துட்டு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி” என்று கூறியுள்ளார்.