“அதிமுக, பாஜக இல்லை”… விஜய்க்கு இருக்கும் ஒரே வழி இதுதான்… 2026-ல் நடக்கப்போகும் மெகா கூட்டணி ட்விஸ்ட்….!

By Nanthini on தை 26, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சினிமாவில் மௌனம் காத்ததைப் போலவே அரசியலிலும் அவர் அமைதி காத்து வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். திமுகவைத் தோற்கடிக்க அதிமுக-பாஜக கூட்டணியுடன் விஜய் இணைய வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், தற்போதைய சூழலில் விஜய்யின் வாய்ப்புகள் சுருங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரங்கராஜ் பாண்டேவின் கருத்துப்படி, விஜய்க்கு இருக்கும் தற்போதைய ஒரே வாய்ப்பு சீமானுடன் கைகோர்ப்பதுதான். காங்கிரஸ் கட்சி தனது பக்கம் வரும் என்று விஜய் எதிர்பார்த்திருக்கலாம், ஆனால் அவர்கள் திமுக கூட்டணியிலேயே தொடர வாய்ப்புள்ளதால், விஜய்க்கு அந்த கதவு அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் விஜய் அழைத்திருந்தால் சீமானே நேரில் சென்றிருப்பார், ஆனால் தற்போதைய சூழலில் விஜய்தான் சீமானை அணுக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

கூட்டணி குறித்துப் பேசும்போது, சீமான் சமமான தொகுதிப் பங்கீட்டையே எதிர்பார்ப்பார் என்றும், “பாதி தொகுதிகள் உங்களுக்கு, பாதி தொகுதிகள் எனக்கு” என்ற நிபந்தனையுடன் தான் பேச்சுவார்த்தை அமையும் என்றும் பாண்டே கணித்துள்ளார். தமிழக அரசியலில் அடுத்த முதலமைச்சர் எனத் தவெகவினர் முன்னிறுத்தினாலும், கள எதார்த்தத்தில் விஜய் எடுக்கப்போகும் இந்த ‘சீமான் சாய்ஸ்’ அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று இக்கட்டுரை விளக்குகிறது.