தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.
மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் தனித்து தான் போட்டி என சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் தனித்துப் போட்டியிட்டால் தமிழக வெற்றிக்கலகம் தலைவர் விஜய் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார் என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே கணித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் பேட்டியளித்த அவர், விஜய் அதிமுக கூட்டணியில் 50 சீட் வாங்கினாலும் 40 இல் வெற்றி பெறுவார். 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த விஜயால் முடியாது. 50 வேட்பாளர்களுக்கு மேல் பிற கட்சிகளுக்கு போய்விடுவார்கள். விஜய் வெற்றி பெற மாட்டார் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் ஒரு நரேட்டிவ் செட் செய்கிறார் என்ற விமர்சித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…