எனக்கு த்ரிஷா வீடு மட்டும் தான் தெரியும் ; பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகர்

By Deepika on மார்ச் 22, 2024

Spread the love

சவுத் குயின் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை என்றால் அது த்ரிஷா தான். ஜோடி படத்தில் துணை கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் தான் த்ரிஷா. மௌனம் பேசியதே படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து டாப் நடிகையாக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தார்.

Actress Trisha

.

   
   

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாகவே நடித்து வரும் பெருமை இவரையே சாரும். குந்தவையாக தனது இன்னிங்க்ஸை ஆரமித்துள்ள த்ரிஷா தொடர்ந்து பல வருகிறார். ராங்கி, ரோட், லியோ என நடித்து வரும் 40. 40 வயதாகியும் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாது இருக்கிறார்.

 

Trisha and varun maniyan

ஏற்கனவே தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திருமணம் நிச்சயம் நடந்து நின்று போனது. அதன்பிறகு த்ரிஷா திருமணம் செய்து கொள்ளவில்லை. பல வருடங்களுக்கு முன்பு இவர் தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதலில் இருந்தார். அந்த காதலும் தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் த்ரிஷா குறித்து ராணா பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Trisha and Rana

ஒரு விருது விழாவில் மிர்ச்சி சிவா ராணாவிடம், ‘சென்னையில் உங்களுக்கு தெரியாத ஒரு ஏரியாவில் உங்களை கொண்டு போய் விட்டால், அங்கிருந்து வீட்டுக்கு சென்று விடுவீர்களா’ என கேள்வி கேட்டார். இதற்கு ‘கண்டிப்பாக போய்விடுவேன். சென்னையில் என்னை எங்கு கொண்டு போய் விட்டாலும், ஒரே ஒரு நபரின் வீட்டிற்கு நான் சென்றுவிடுவேன். அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷா தான். ஆம், சென்னையில் எங்கு என்னை விட்டாலும், நான் திரிஷாவின் வீட்டிற்கு சென்று விடுவேன்’ என கூறினார்.