தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ரம்யா ரங்கநாதன். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், இதில் ரம்யாவின் நடனமும் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, பாரி இளவழகன் இயக்கத்தில் இவர் கதையின் நாயகியாக நடித்த ‘அன்பே டயானா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாகத் துணிச்சலாக நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற ரம்யா, கோலிவுட்டின் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாகப் பார்க்கப்படுகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் சினிமா பயணம் குறித்துப் பேசியுள்ள ரம்யா, தான் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் நிலையான வேலை பார்த்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். தனது நடனத் திறமையைக் கண்டறிந்த நடிகர் தனுஷ், தமக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் வாய்ப்பளித்ததாகவும், படப்பிடிப்பின் போது அவர் அருகில் நின்று தமக்கு வழிகாட்டியதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். முதல் படம் முடிந்த பிறகு அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த தனக்கு, தனுஷ் கொடுத்த ஊக்கமே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
மாதா மாதம் நிலையான வருமானம் தந்து கொண்டிருந்த கார்ப்பரேட் வேலையை விடுவது குறித்துத் தயங்கிய ரம்யாவிடம், நடிகர் தனுஷ், “என்னை நம்புங்கள், உங்களுக்கு சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது; ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்காதீர்கள், தைரியமாக என்னை நம்பி வாருங்கள்” என்று நம்பிக்கை ஊட்டியுள்ளார். தனுஷின் அந்த ஒற்றை வார்த்தையை நம்பி தனது வேலையைத் துறந்து முழுமையாக சினிமாவில் இறங்கியதாகவும், அந்த தைரியமான முடிவுதான் இன்று தன்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் ரம்யா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…