actor Sivakarthikeyan

சேயோன் படத்துல சிவகார்த்திகேயன் அம்மா நடிக்கப் போறது இவங்களா? அட இவங்க எஸ்கேவை விட 2 வயசு சின்னவங்க ஆச்சே? – ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மாசி 22, 2026

Spread the love

தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படம் சேயோன். இந்த படத்தில் 39 வயதான நடிகை ரம்யா நம்பீசன் 41 வயதான சிவகார்த்திகேயனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். ரம்யா நம்பீசன் ஏற்கனவே சேதுபதி நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் குள்ளநரிக்கூட்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.

சிவகார்த்திகேயனுக்கு ரம்யா நம்பீசன் அம்மா என்கிற இந்த காம்பினேஷன் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண அம்மா கேரக்டர் அல்ல. கதையில் முக்கியமான திருப்பத்தை தீர்மானிக்கும் கேரக்டர் என்று கூறப்படுகிறது. மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.