AR.ரஹ்மான் கான்சர்ட்டை விட கலவரமான ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி.. காலில் விழாத குறையாக கெஞ்சிய ரம்பா.. நடந்தது என்ன..?

By Ranjith Kumar

Published on:

ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்தில் உள்ள ஓபன் ஸ்டேடியத்தில் ரம்பா அவர்களின் கணவர் தலைமையில் நடத்திய இசையமைப்பாளர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. 1992 ஆம் ஆண்டு மலையாள படமான சர்கம் படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ரம்பா அவர்கள் மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், போஜ்புரி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெற்றிகரமான சமநிலையை வைத்திருந்தவர்.


2010 தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை மணந்தார். அவர்கள் இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.திருமணத்திற்குப் பிறகு, திரைப்படங்களில் தனக்கு இருந்த புகழ் குறைந்துவிட்டதை உணர்ந்த அவர் திரைப்படங்களை விட்டுவிட்டார், மிகவும் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான மானாட மயிலாட மற்றும் தெலுங்கு நடன நிகழ்ச்சியான டீ. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் டொராண்டோவிலிருந்து திரும்பி வந்து, ஜீ தெலுங்கு நடன நிகழ்ச்சியான ABCD-Anybody Can Dance இன் நடுவராகத் தோன்றினார் மற்றும் விஜய் டிவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் நடுவராக இருந்தார்.

   

தற்போது இவரின் கணவரான இந்திரகுமார் பத்மநாதன் அவர்கள் கன்னடத்தில் நடத்தி வரும் அவரது சொந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்காக மற்றும் அவர் செய்யும் தொழில்களுக்கு பிரமோஷன் ஆக, ஸ்ரீலங்காவில் உள்ள யாழ்பாணத்தில் ஓபன் ஸ்டேடியத்தில் தொகுப்பாளர் கலா மாஸ்டர் அவர்களும் இசையமைப்பாளர் ஹரிஹரனை வைத்து கலை நிகழ்ச்சி நடத்தினார், அதில் ரெட்டில்ஸ் கிங்கிலி, யோகி பாபு, தமன்னா ஆகிய பல பிரபலங்கள் இணைந்துள்ளார்கள், தமன்னா அவர்களை நடனம் ஆட சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

இந்திரகுமார் அவர்கள் இந்த கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக பெருமளவில் டிக்கெட் கலை விலை உயர்த்தி விற்று உள்ளார். முன்பக்கத்தில் அமர்வர்களுக்கு 30,000 அதற்குப் பின் 7000 அதற்கும் பின் அமர்பவர்களுக்கு 3000 என்று பல மடங்கு காசுகளை வசூலித்துள்ளார். தமன்னாவுடன் தனிப்பட்ட போட்டோ எடுப்பதற்கு அதிகமாக காசுகளை வசூலித்து உள்ளார். அதுமட்டுமின்றி விலை இல்லா டிக்கெட்களையும் கொடுத்து ரசிகர்களை பெருமளவில் இசைக்குழுவிற்கு அழைத்திருக்கிறார், இவ்வளவு பெரிய கூட்டத்தை அடக்குவதற்கு வெறும் 200 காவல்துறையினரை மட்டும் வைத்திருந்ததால் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பெரும் சலசலப்பாக ஆகியிருக்கிறது, இலவச டிக்கெட்டில் நிகழ்ச்சி பார்க்க வந்த ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையங்களை தகர்த்தெறிந்து விட்டு நிகழ்ச்சியின் முதல் தளத்தில் அமர்ந்திருக்கும் கூட்டத்திற்குள் நுழைந்த நிகழ்ச்சியை பார்க்க முயன்றதால் பெரும் சலசலப்பாகிவிட்டது, கூட்ட நெரிசலால் அதிக விலை கொடுத்து கலை நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்கள் பெரும் கோபத்திற்கு உள்ளார்கள்,

இதற்குக் காரணம் ஆயிர ஆயிரக்கணக்கான ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக குறைந்த அளவில் போலீஸ் பாதுகாப்பு வைத்து, சரியான பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தாமல் அலட்சியமாக இருந்த இசைக் குழுவை வழி நடத்திய ரம்பாவின் கணவர் ரத்தினகுமார் அவர்கள் தான் காரணமாம். இது மட்டுமின்றி தமன்னா அவர்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் வந்தபோது அவர்களை சுற்றி பத்திரிகையாளர்கள் சூழ்ந்து பேச முனைந்த போது அவர் சரியாக பதிலளிக்காமல் பத்திரிகையாளர்களை பார்த்து அலட்சியமாக கைய அசைத்து விட்டு சென்று விட்டாராம், அதன் பின் இசை நிகழ்ச்சியின் போது தமன்னா அவர்களை பார்ப்பதற்காக காத்திருந்த ரசிகர் கூட்டங்களுக்கு தமன்னா மேடையில் வந்து கையை மட்டும் காட்டி விட்டு சென்று விட்டாராம், இதை கண்ட ரசிகர்கள் கையாற்றுவதை பார்ப்பதற்காகவா இவ்வளவு காசு கொடுத்து இங்கு வந்துள்ளோம் என்று கோபத்திற்கு உள்ளானார்கள், தமன்னா செய்த காரியத்தாலும் இந்த இசை நிகழ்ச்சி பாதுகாப்பு முறை பலப்படுத்தாமல் அலட்சியமாக நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்களை கையாண்டதால் பெரும் அளவில் இவர்கள் மேல் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.இதற்காக காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்ட ரம்பா அவர்கள்.

author avatar
Ranjith Kumar