அவர் நடிக்கவே கூடாது.. கரகாட்டகாரன் கவுண்டமணி காதாபாத்திரத்திற்கு இயக்குனரிடம் சண்டை போட்ட ராமராஜன்..!!

By admin on ஆவணி 17, 2024

Spread the love

அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். கடந்த 1989-ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் கரகாட்டம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ராமராஜன் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக கனகா நடித்தார்.

கரகாட்டகாரன் 2 எடுக்கும் முன்னணி இயக்குனர்! ஹீரோ யார் தெரியுமா

   

மேலும் சந்தான பாரதி, சந்திரசேகர், சண்முகசுந்தரம், செந்தில், கவுண்டமணி, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கரகாட்டக்காரன் படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிகர் கவுண்டமணி தவில் வித்வான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

   

Stream Karakattakaran by goundamani | Listen online for free on SoundCloud

 

முதலில் கங்கை அமரன் பிரபல நடிகரான எஸ்.எஸ் சந்திரனை தான் தவில் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு எழுதியுள்ளார். ஆனால் எஸ்.எஸ் சந்திரன் அரசியல் கருத்துக்களை பேசுவார். அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என ராமராஜன் கங்கை அமரனிடம் கூறினாராம். அதனை ஏற்காமல் எஸ்.எஸ் சந்திரனை தான் நடிக்க வைக்க வேண்டும் என கங்கை அமரன் உறுதியாக இருந்துள்ளார்.

மறைந்தாலும் எஸ்.எஸ்.சந்திரனை தேடும் ரசிகர்கள்..அவருக்குள் இத்தனை  திறமையா?அவருடைய மகனும் நடிகர் தானா? | S. S. Chandran Fans have been  searching about on social media ...

சில நாட்கள் கழித்து ராமராஜன் மீண்டும் கங்கை அமரனை சந்தித்து எஸ்.எஸ் சந்திரன் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க கூடாது. ஏற்கனவே தனது படங்களில் காமெடியனாக நடித்த எஸ்.எஸ் சந்திரன் அரசியல் பற்றி பேசியதற்கு கருத்து வேறுபாடு எழுந்துள்ளது என கூறியுள்ளார். அதன் பிறகு கங்கை அமரன் கவுண்டமணியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். கங்கை அமரன் நினைத்தபடி கவுண்டமணி கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம் பிடித்தது.

சினிமாவின் அனைத்திலும் கொடிகட்டி பறந்த கங்கை அமரன் - CineReporters