அப்பா மீது செம கடுப்பு… தனுஷ் பக்கம் தாவ பிளான்… போடும் ராமதாஸ் மகள்?… அரசியலில் கிளப்பும் புதுப் புயல்…!

By Swetha on ஐப்பசி 26, 2026

Spread the love

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு டாக்டர் ராமதாவுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பா.ம.க. கட்சியில் குழப்பம் நிலவியது. பின்னர் தேர்தல் முடிந்ததும் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டாக்டர் ராமதாஸ் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார்.

தந்தையான ராமதாஸின் இந்த திடீர் அரசியல் ஓய்வு மற்றும் முடிவுகளால் அவரது மகளும், பா.ம.க.வின் செயல்தலைவராகப் பிரசாரங்களில் ஈடுபட்டவருமான காந்திமதி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

தந்தையின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் இருக்கும் காந்திமதி, நடிகர் தனுஷ் விரைவில் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியான ‘தமிழக எழுச்சிக் கழகம்’ கட்சியில் இணைவதற்கான திட்டத்தில் உள்ளதாகவும், இதற்காக தனுஷைச் சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.