அடுத்த பரபரப்பு..! திடீர் சந்திப்பு… திமுக கூட்டணியில் இணையும் ராமதாஸ்..? ஹேப்பி மோடில் ஸ்டாலின்..!!

By Soundarya on ஐப்பசி 29, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினருக்கிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கும், திமுகவில் இருந்து அதிமுகவிற்கும் கூட்டணியில் தாவி வருகிறார்கள். இதற்கிடையில் அதிமுக, பாமக போன்ற கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுகவின் வெற்றிக்கு அது சாதகமாகிவிட்டது என்றே பேசப்படுகிறது.

இந்நிலையில் சமீபகால அரசியல் நிகழ்வுகள் திமுக கூட்டணியில் ராமதாஸ் இணைவதற்கான சிக்னல்களாக பார்க்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பாக விசிக, பாமக ஒரு அணியில் இருக்க முடியாது என பேசி வந்த திருமாவளவன், சமீபத்தில் திமுக கூட்டணியில் ராமதாஸ் வருகிறாரா? என்ற கேள்விக்கு சைலண்டாக சென்றார். இந்நிலையில் நேற்று இரவு, திமுக கூட்டணியில் உள்ள கொமதேக தலைவர் ஈஸ்வரன் திடீரென ராமதாஸை சந்தித்து பேசியுள்ளார். இது அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.