“அன்புமணி இல்ல.. ஜி.கே.மணி இல்ல.. அப்போ யாரு?”…. ராமதாஸின் 2026 ‘சீக்ரெட் மாஸ்டர் பிளான்’ அம்பலம்… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

By Nanthini on பங்குனி 28, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் வியூகம் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமக வலுவாக இருக்கும் தர்மபுரி, பென்னாகரம், ரிஷிவந்தியம், விக்கிரவாண்டி, சேலம் மேற்கு மற்றும் சோளிங்கர் உள்ளிட்ட தொகுதிகளில் நேரடியாகத் தனது ஆதரவாளர்களைக் களமிறக்க டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சியின் மூத்த தலைவரான ஜி.கே.மணி மற்றும் ராமதாஸின் மகள் காந்திமதி ஆகியோர் இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கட்சிக்குள்ளும் வெளியிலும் மிகுந்த செல்வாக்குள்ள தீவிர ஆதரவாளர்களைத் தேர்ந்தெடுத்து வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நிறுத்தி, தனது பலத்தை நிரூபிக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.