#BREAKING: உனக்கும் பாமக-வுக்கும், என்னோடும் எந்த சம்பந்தமும் இல்லை… ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!

By Soundarya on கார்த்திகை 6, 2025

Spread the love

ஆத்தூரில் நடைபெறும் பாமக பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு எடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். டிசம்பர் 30 இல் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “அரசியலில் சில தவறுகளை செய்துள்ளேன் .அதில் ஒன்றுதான் அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது.

இன்னொன்று பாமகவின் தலைவர் பதவி அவருக்கு கொடுத்தது. பொதுமக்கள் மத்தியில் கட்சியில் பிளவு இருப்பதை போன்று அருவருக்கத்தக்க வகையில் செயல்படுகிறார். அன்புமணி நான் உனக்கு எல்லா பதிவுகளையும் கொடுத்தேன். எல்லாம் வீணா போச்சு. உனக்கும் பாமகவுக்கும், என்னோடும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.