#BREAKING: தெற்கே சசிகலா.. வடக்கே ராமதாஸ்.. தமிழக அரசியலில் உருவெடுக்கும் ‘மெகா கூட்டணி’… தைலாபுரத்தில் நடந்த நள்ளிரவு ரகசியம்…!

By Nanthini on பங்குனி 20, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் ஒரு அதிரடியான மாற்றமாக, சசிகலாவின் அஇபுதமமுக மற்றும் டாக்டர் ராமதாஸின் பாமக ஆகிய கட்சிகள் கைகோர்த்து வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மெகா கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக, சசிகலா அவர்கள் சென்னையில் இருந்து திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு நேரில் சென்று டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்; இந்தச் சந்திப்பு முடிந்தவுடன் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சசிகலாவும், வடமாவட்டங்களில் பலமான அடித்தளம் கொண்ட ராமதாஸும் இணைந்து செயல்படுவதன் மூலம் மாநிலம் தழுவிய அளவில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவும், இரு தரப்பு வாக்கு வங்கிகளையும் ஒன்றிணைத்து பிரதான கட்சிகளுக்கு கடும் சவாலை அளிக்கவும் இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.