பாமக-வில் உச்சக்கட்ட மோதல்… மகனுக்கு செக் வைத்த தந்தை… ராமதாஸ் தொடர்ந்த அதிரடி வழக்கால் அன்புமணி செம ஷாக்…!

Spread the love

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாமக இரு அணிகளாகப் பிரிந்து செயல்படும் நிலையில், அன்புமணி தலைமையிலான அணி அதிமுக அங்கம் வகிக்கும் என்.டி.ஏ. கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் தனி அணியாகத் தேர்தலைச் சந்திக்கின்றனர். இந்தச் சூழலில், தனது புகைப்படத்தை அன்புமணி தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை 13-வது உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும், அவர் சட்டவிரோதமாகத் தலைவராக நீடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமக்கும் அன்புமணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், தேர்தல் பிரச்சாரங்களின் போது தனது உருவப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அன்புமணிக்குத் தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தன. அந்தப் பின்னடைவுக்குப் பிறகு, தற்போது தனது தனிப்பட்ட பிம்பம் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ராமதாஸ் இந்த புதிய சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு அன்புமணி ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் 18 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தை – மகன் இடையிலான இந்தப் சட்டப் போராட்டம் பாமக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை வேட்பாளர்களின் பிரச்சார யுக்தியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

2 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

9 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

24 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

26 minutes ago

அப்படியே அம்மாவை காப்பி அடிக்கும் குட்டி..! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் குரங்கின் வீடியோ…. பின்னணியில் இருக்கும் ஆழமான உண்மை.. வியந்துபோன நெட்டிசன்ஸ்..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற…

28 minutes ago

இது வெறும் சூட்கேஸ் இல்ல.. உள்ளே இருந்த பொருள்… மருமக்களுக்காக மாமியார் செய்த செயல்.. இப்படியொரு மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்… நெட்டிசன்கள் நெகிழ்ச்சி…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாமியார், பெங்களூருவில் வசிக்கும் தனது மருமகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அவருக்குப் பிடித்தமான…

32 minutes ago