BREAKING: அதிமுக கூட்டணியில் அன்புமணி… பாமகவின் அடுத்த கட்ட நகர்வு… சற்றுமுன் ராமதாஸ் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on தை 7, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட வருகின்றது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில் பாமக மற்றும் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாமக தலைவர் அன்புமணி இன்று காலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

பாமக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் சாமியை சந்தித்து தேர்தல் கூட்டணி தொடர்பாக அன்புமணி பேசி இருந்தார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் அதிமுக வெற்றிக்கு கணிசமாக உதவி இருந்தது பாமக. 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமக மற்றும் அதிமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்

   

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது ஏற்புடையது அல்ல என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், அன்புமணி தலைவரே கிடையாது என்றும் அவருடன் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தியது சட்டப்படி செல்லாது. நாளை நடைபெற உள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் பாமகவின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அறிவிக்கப்படும் என ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்