தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பாமகவில் யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத நிலைமை தான் தற்போது நீடிக்கிறது. தந்தை மகனின் சண்டை டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி அதனை மேடையிலேயே வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேற தன்னுடைய மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் ராமதாஸ் அமர்த்தினார்.
இது அன்புமணிக்கு ராமதாஸ் உடனான மோதலை மேலும் அதிகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்ள ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம் பாமகவில் யார் தலைவர் என்பதில் குளறுபடிகள் இருப்பதால் தேர்தல் நேரத்தில் வேட்புமணியில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனையும் வரும். இதனால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கியது.
இப்படி அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பாமகவில் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு இடையே ஸ்ரீகாந்தியின் மற்றொரு மகனான சுகுந்தனையும் ராமதாஸ் களமிறக்கி உள்ளார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க கோரி விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார். முன்னதாக முகுந்தனுக்கு பாமகவில் பொறுப்பு வழங்கியது ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சண்டை வளர முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான் உடனான மோதல் தொடங்கி 60 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதியின்றி போரைத் தொடர முடியாது…
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள…
குடும்பத்தினர் சந்தைக்குச் சென்றிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, இளம் பெண் ஒருவர் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர்கள் இருவரும் தனிமையில்…
தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த கையோடு, வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்…
இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர். அந்த வகையில், தற்போது இணையத்தில்…
பிரபலமான 'தமிழா தமிழா' விவாத நிகழ்ச்சியில், இந்த வாரம் "மீளா துயரால் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தவர்கள் VS அதில் இருந்து…