BREAKING: ராமதாஸ் தனித்துப் போட்டி..? திட்டவட்டமாக அறிவித்தார்…!!

By Soundarya on மாசி 1, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி அவர்கள், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனித்துப் போட்டியிட மாட்டார் என்றும், நிச்சயம் ஒரு வலுவான கூட்டணியிலேயே இடம்பெறுவார் என்றும் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரத்தில் இன்று (பிப். 01) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி குறித்துப் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது அந்த விவரங்களை வெளியே கூறுவது சரியாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாக்டர் ராமதாஸ் அவர்களே விரைவில் வெளியிடுவார் என்றும் ஜி.கே. மணி கூறினார். வெற்றி பெறக்கூடிய மற்றும் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய ஒரு கூட்டணியைத் தேர்ந்தெடுப்பதில் நிறுவனர் கவனமாக இருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.