பாசப் போராட்டம் முடிவுக்கு வந்தது..! 2.30 மணி நேர உருக்கமான சந்திப்பு… மகனைக் கட்டியணைத்து அழுத ராமதாஸ்..!!

By Soundarya on ஆனி 24, 2026

Spread the love

நீண்ட நாட்களுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸும், அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான சந்திப்பில், அவர்கள் இருவரும் மனம் விட்டுப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நீண்ட உரையாடலின் மூலம், கடந்த சில காலமாக அவர்களுக்கு இடையே நிலவி வந்ததாகக் கூறப்பட்ட கருத்து வேறுபாடுகள் அனைத்தும் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பின் போது, உணர்ச்சிவசப்பட்ட மருத்துவர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியைக் கட்டியணைத்து அழுததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அன்புமணி ராமதாஸும் அவரது மனைவி சௌமியா அன்புமணியும் மருத்துவர் ராமதாஸின் காலில் விழுந்து வணங்கி, அவரது அன்பான ஆசியைப் பெற்றுள்ளனர். குடும்பத்தினரிடையே ஏற்பட்ட இந்த நெகிழ்ச்சியான இணக்கம், பாமக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.