“மந்திரி பதவி தராட்டி நாங்க இல்ல!”.. பாஜக கூட்டணியை உடைக்க துணியும் ராமதாஸ்?.. அதிரும் அரசியல் காலம்..!!!

By Muthu Mani on வைகாசி 25, 2026

Spread the love

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கூட்டணிக் கணக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரவும் பாட்டாளி மக்கள் கட்சியை (பாமக) ஒரு முக்கியமான அரசியல் நகர்வை நோக்கி தள்ளியுள்ளது. அதிமுக கூட்டணி பலவீனமடைந்துள்ள சூழலிலும், தவெக தலைவர் விஜய் திமுகவின் கூட்டணிக் கட்சிகளை ஈர்க்க முயன்றபோதும், விசிக போன்ற அரசியல் காரணங்களால் வட தமிழகத்தில் வலுவான வாக்கு வங்கி கொண்ட பாமகவை அவர் அணுகவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக கூட்டணியில் நீடித்து வரும் பாமக, தமிழகத்தில் பாஜகவின் தற்போதைய தேர்தல் வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கருதுவதால், தங்களுக்குப் போதிய அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தச் சூழலில், இனியும் பாஜக கூட்டணியில் தொடர வேண்டுமானால் தங்களுக்குக் தகுந்த அரசியல் ஆதாயம் இருக்க வேண்டும் என்று பாமக தலைமை உறுதியாக முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டும் என்று பாஜக தலைமைக்கு அழுத்தம் கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் அப்னா தளம் மற்றும் பீகாரின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா போன்ற கட்சிகள் தலா ஒரு எம்பியை மட்டுமே கொண்டிருந்தாலும் அவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டிருக்கும் போது, தங்களுக்கு மட்டும் ஏன் அந்த அங்கீகாரம் மறுக்கப்பட வேண்டும் என்ற வருத்தமும், கேள்வியும் பாமகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

   

பாமகவின் இந்த மத்திய அமைச்சர் பதவி கோரிக்கைக்கு பாஜக தலைமை பச்சைக் கொடி காட்டுமா அல்லது முட்டுக்கட்டை போடுமா என்பதுதான் தற்போதைய தமிழக அரசியல் களத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தவெக-வின் வருகையால் வாக்குகள் பிரியும் எனக் கணிக்கப்படும் நிலையில், வட தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தங்களுக்கு என்று தனித்துவமான வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவைத் தக்கவைத்துக் கொள்வது பாஜகவிற்கும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தமிழகத்தில் தன் கூட்டணியைப் பலப்படுத்திக் கொள்ள அன்புமணியின் இந்தக் கோரிக்கையை பாஜக ஏற்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.