காமராஜர் பிள்ளைகளை படிக்க வைத்தார்… ஆனால் கருணாநிதியோ குடிக்க வைத்தார்.. ராம சீனிவாசன் அதிரடி பேச்சு..!!

By Soundarya on சித்திரை 14, 2026

Spread the love

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன், இன்று இந்திரா நகர் பகுதியில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பரப்புரையைத் தொடங்குவதற்கு முன்னதாக, அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தொகுதிக்குட்பட்ட பல்வேறு தெருக்களில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்தபோது, அப்பகுதி பொதுமக்கள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம சீனிவாசன், மக்கள் மத்தியில் தாமரை சின்னத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பெருகி வரும் மது மற்றும் கஞ்சா கலாச்சாரத்தால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாக அவர் கவலை வெளியிட்டார். போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, இளைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது உரையின் போது வலியுறுத்தினார்