Categories: CINEMA

ராம் சரணின் மனைவி 1130 கோடிக்கு அதிபதியா.. அப்போலோ மருத்துவமனையின் 3-ம் தலைமுறை வாரிசு.. யார் இந்த உபாசனா காமினேனி..?

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி 1130 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என்பது தெரிய வந்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண். இதுவரை 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கூட அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.

ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கு சென்றிருக்கும் ராம்சரண் தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்தின் மூலமாகவும் மிகப்பெரிய புகழை எட்ட இருக்கின்றார். ராம்சரனின் சொத்து மதிப்புக்கு போட்டியாக அவரது மனைவி உபாசனின் சொத்து மதிப்பும் இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு ராம்சரண் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஃப்ரீஸ் செய்து வைக்கப்பட்ட கருமுட்டையை பயன்படுத்தி இவர் ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் சொத்துக்களை எல்லாம் சேர்க்காமல் நடிகர் ராம்சரண் மற்றும் அவரது மனைவியின் சொத்துக்களை சேர்த்தாலே 2500 கோடி தேறும் என்று கூறி வருகிறார்கள். நடிகர் ராம்சரண் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் 45 கோடி சம்பளம் வாங்கினார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்குகின்றார். அடுத்தடுத்த திரைப்படத்திற்கு 120 மற்றும் 150 கோடி வரை சம்பளம் வாங்கப் போகிறார் என்பது தெரிய வந்தது. இப்படி இருக்கையில் அவரிடம் எப்படி 2500 கோடி சொத்து இருக்கும் என பலரும் கேட்பார்கள். அதற்கு காரணம் அவரது மனைவி தான். அவர் யார் என்ன வேலை செய்கிறார் என்பதை பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.

ராம்சரணியின் மனைவி பெயர் உபாசனா காமினேனி . அப்போலோ மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவருமான டாக்டர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி ஆவார். அது மட்டுமில்லாமல் இந்திய பன்னாட்டு சுகாதாரக் குழு செயல் துணைத்தலைவரான ஷோபனா காமினியின் மகள் ஆவார். அப்போலோ மருத்துவமனையின் மூன்றாம் தலைமுறை வாரிசாக உபாசனா துணை தலைவராக பதவி ஏற்று வருகின்றார்.

ட்யூரட்டட் உள்ளடக்கம் மற்றும் சேவைகளை வழங்கும் ஆரோக்கிய தளமான யூஆர் லைஃப் இன் நிறுவனரும் இவர் ஆவார். 2023 ஆம் ஆண்டின் பணக்கார இந்தியர்களில் அதாவது போர்ப்ஸ் அறிக்கைப்படி அப்பல்லோ மருத்துவமனைகள் சுமார் ரூபாய் 77 ஆயிரம் கோடி சொத்துக்களை கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. அப்போலோ சாரிட்டியின் வைஸ் சேர்மனாகவும் இருந்து வரும் இவர் 1130 கோடி ரூபாய் சொத்துக்கு தனி சொந்தக்காரர் ஆவார்.

#image_title

மேலும் ஹைதராபாத்தில் இந்த தம்பதிகளுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிருக்கும் 25 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்ட வீட்டில் தான் இந்த தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்களிடம் ரோல்ஸ் ராயல்ஸ் பேண்டன் என்னும் கார், 4 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் மேபேக் சொகுசுக்கார், ஃபெராரி போர்ட்டோபீனா என்று பல கோடி மதிப்புள்ள கார்கள் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் தனியாக பிரைவேட் ஜெட் ஒன்றும் ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

7 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

8 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago