அமரன் படத்தின் நிஜ ஹீரோ.. 10-ம் ஆண்டு நினைவஞ்சலி.. மேஜர் முகத்துக்கு மரியாதை செலுத்திய இயக்குனர் ராஜ்குமார்..!

By Mahalakshmi on ஏப்ரல் 25, 2024

Spread the love

அமரன் திரைப்படத்தின் இயக்குனர் மேஜர் முகுந்தன் வரதராஜன் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அமரன் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிக்கிறார்கள்

   

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது. அதாவது இந்தியாவிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்து வரதராஜன் கதையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்து வருகிறார்கள்.

   

 

இந்நிலையில் அவர் இறந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரின் கல்லறைக்கு நேரே சென்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மலர்கள் வைத்து மரியாதை செலுத்தியிருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் இதோ..