என்ன தான் ஒரு சூப்பர் ஸ்டாரின் குடும்பம் என்றாலும் அங்கும் பிரச்னைகளும், சச்சரவுகளும் இருக்கத் தான் செய்யும். அப்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு நீண்ட வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்னை இன்றும் முடியாமல் நீடித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படம் வெளியானது. கோச்சடையான் திரைப்படத்தை எடுப்பதற்காக மீடியா ஒன் நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் ஆட் பீரோ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்திடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

#image_title
இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது. கோச்சடையான் படம் எதிர்பார்த்த அளவில் லாபத்தை கொடுக்காத நிலையில், முரளியால், அந்த 6.2 கோடி ரூபாய் கடனை செட்டில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியதை தொடர்ந்தே, லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்து போட்டுள்ளார். ஆனால் படம் நஷ்டத்தை சந்தித்ததால் முரளி அந்தப் படத்தை செட்டில் செய்யாத நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் லதா ரஜினிகாந்த் மீது 4 பிரிவுகளில் மோசடி புகார் கொடுக்கப்பட்டு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது.

#image_title
4 பிரிவுகளில் லதா ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கர்நாடக நீதிமன்றத்தில் மேற்கொண்ட மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து 3 வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மீதமுள்ள ஒரு வழக்கின் விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்த வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையில் லதா ரஜினிகாந்த் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று முன்னதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்றைய தினம் லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணையில், அவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

#image_title
அவர் நீதிமன்றத்திற்கு தலையில் முக்காடு போட்டபடி ஆஜராக சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என்றும் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும் லதா ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
