தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தலைவர் 171 என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.
சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. சமீபத்தில் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. ரஜினியின் கையில் வாட்ச்சுகள் கைவிலங்கு போல் கட்டப்பட்டிருந்தன. இதை பார்த்த பலரும் டைம் டிராவல் திரைப்படம் என்று கூறி வந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் பல நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.
நடிகர் சிவகார்த்திகேயன் பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர் அடிபட்டு வந்தது. அந்த வகையில் தற்போது தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டிலை சன் பிக்சர் நிறுவனம் சற்று முன் வெளியிட்டுள்ளது. படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது மேலும் டைட்டில் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் மாஸாக ரஜினி வெளிவரும் காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றது.