விஜய்க்கு காத்திருக்கும் ஆபத்து.. அண்ணாமலை அணியில் இணையும் ரஜினி வாரிசு?.. நள்ளிரவில் நடந்த ரகசிய மீட்டிங்… பரபரக்கும் பின்னணி…!!

By Muthu Mani on ஆனி 11, 2026

Spread the love

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தனது முதல் தேர்தல் களத்திலேயே வெற்றியை வசமாக்கி, கூட்டணி ஆட்சியுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார். விஜய்யின் இந்த அரசியல் விஸ்வரூபம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி, திரையுலகிலும் அவரை விமர்சித்த பலருக்கு அதிருப்தியைத் தந்துள்ளது. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு அவருக்கும் மு.க.ஸ்டாலினுக்குமான நட்பு வலுப்பட்ட நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இதை மறைமுகமாக எதிர்ப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், திமுக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ரஜினிகாந்த் தூதாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்ட புகார்களை அவர் மறுத்திருந்தாலும், தவெக ஆட்சியைப் பிடித்தது ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் முழு திருப்தியை அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தமிழக பாஜகவிலிருந்து விலகி “வி தி லீடர்ஸ்” அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலையை, ரஜினிகாந்தின் இரண்டாவது மருமகனான விசாகன் நேரில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் முன்பு தொடங்கவிருந்த கட்சியில் இணைய அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், இருவருக்கும் இடையே ஏற்கனவே நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. தற்போது அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்க ஆயத்தமாகி வரும் வேளையில், தான் தவறவிட்ட ஆட்சி அதிகாரத்தை அண்ணாமலை மூலம் எட்ட ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அஸ்திவாரமாகவே தன் மருமகனை அவர் அனுப்பி வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

   

விசாகனுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த இயக்கம் முழுமையான அரசியல் கட்சியாக மாறும்போது விசாகனுக்குப் பொதுச்செயலாளர் அல்லது அதற்கு நிகரான முக்கியப் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் மருமகன் அண்ணாமலையுடன் கைகோர்த்தால், ரஜினி ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் வாக்குகளையும் தன்பக்கம் இழுக்கலாம் என அண்ணாமலை காய் நகர்த்தி வருகிறார். தமிழ்நாட்டில் இனிவரும் அரசியல் களம் தவெக-வை மையப்படுத்தியே இருக்கும் என்பதால், அண்ணாமலை மற்றும் விசாகன் கூட்டணி அமைந்தால், அது திமுகவை விட தவெக-வை மிகக் கடுமையான முறையில் எதிர்த்து அரசியல் செய்யும் என்றே கணிக்கப்படுகிறது.