களைகட்டும் ஜெயிலர் கொண்டாட்டம்… பெங்களூருக்கு படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள்… ஜெயிலர் பட டிக்கெட் விலை இவ்வளவா?..!!

By Nanthini on ஆவணி 8, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் இறுதியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தமன்னா உள்ளிட்டா பல பிரபலங்களும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

   

இந்த திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அதிக வரவேற்பு இருக்கும். ஆனால் தமிழகத்தில் முதல் காட்சியை 9 மணிக்கு தான் தொடங்க உள்ளது. பெங்களூரில் காலை 6:00 மணிக்கு முதல் காட்சி தொடங்க உள்ளதால் பெங்களூரில் முகுந்தா, பாலாஜி மற்றும் பூர்ணிமா உள்ளிட்ட தனி திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

   

 

பெங்களூரில் தனி திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 300 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 600 முதல் 2600 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் பெங்களூரில் குவிந்துள்ளனர்.