ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் கூலி. இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு இடையில் ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதை கமலஹாசனும் ரஜினிகாந்த்தும் உறுதிப்படுத்தினார்கள். இந்த படத்தை நெல்சன் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தோடு நடிப்பிலிருந்து ஓய்வு பெறலாம் என்று ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த் சுந்தர் சி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
