மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்.. அதற்கு அவர் என்ன காரணம் சொன்னார் தெரியுமா..?

By Nanthini on மாசி 18, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவருடைய நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் நாகார்ஜுனா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

சூப்பர் ஸ்டார் நலமாக உள்ளார்! - Maddakaththi.lk

   

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு மே மாதம் திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது. கூலி திரைப்படத்தை முடித்த கையோடு ரஜினி மூன்று மாதம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் தன்னுடைய சுயசரிதையை எழுத முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெய்லர் 2 படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் முதல் பாகத்தை விட மிக பிரம்மாண்டமாக ஜெயிலர் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

   

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? - தமிழ்  News - IndiaGlitz.com

 

இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்களைத் தொடர்ந்து ரஜினி யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருக்கும் நிலையில் இந்த இரண்டு படத்தையும் முடித்த கையோடு ரஜினி சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற வதந்தியெல்லாம் பரவியது. ஆனால் உண்மையில் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணிகளையும் ரஜினி தொடர்ந்து செய்து வருகின்றார்.

இரண்டு மீட்டிங் நடந்தும் மாரி செல்வராஜுக்கு 'No சொன்ன ரஜினி!.. இதுதான்  காரணமா?!... | actor rajinikanth denied to act in mari selvaraj direction

இப்படியான நிலையில் மாரி செல்வராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார். மாரி செல்வராஜ் படங்கள் என்றாலே பொதுவாக சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனை யோசித்த ரஜினி மாரி செல்வராஜ் படத்திற்கு நோ சொல்லிவிட்டாராம். சர்ச்சையில் சிக்கி ரிஸ்க் எடுக்க விரும்பாததால் ரஜினி மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் வேறு இயக்குனருக்கு கை மாறி உள்ளது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.