Connect with us

CINEMA

நா பாத்து வளந்த பையன் விஜய்.. அவருக்கும் எனக்கும் போட்டினா அது எனக்கு மரியாதை.. மேடையில் காக்க கழுகு கதையை பேசிய ரஜினி..

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற போட்டி நிலவி வந்த நிலையில், அது விஜய் தான் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர். ஆனால் என்றைக்குமே தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அப்படியிருக்க, இவர்கள் இருவரும் அவரவர் பட இசை வெளியீட்டின் போது, ஒருவருக்கு ஒருவர் அட்டாக் செய்யும் வகையில் காக்கா கழுகு என கதைகளை கூறி வந்தனர். இந்த நிலையில், கிரிக்கெட்டை மையப்படுத்தி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லாம் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

#image_title

   

இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இஸ்லாமிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசும் போது, “லால் என்றால் சிவப்பு என்று அர்த்தம்.. இந்த சிவப்பு நிறத்தை பொறுத்தவரை நிறைய அடையாளங்கள் இருக்கிறது. அதை கம்யூனிஸ்ட்கள் பயன்படுத்துவார்கள். வன்முறைக்கும் பயன்படுத்துவார்கள். புரட்சிக்கும் பயன்படுத்துவார்கள். என் மகள் ஐஸ்வர்யா புரட்சிக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார். லால் சலாம் படத்தின் கதையை என்னிடம் சொல்லும்போதே, இந்த கதைக்கு தேசிய விருது கிடைக்கும் என ஐஸ்வர்யா சொன்னார். அப்போது அவரிடம் விருதுக்காக நான் கேட்கமாட்டேன் என்று கூறினேன். அதன் பிறகு இது உண்மை கதை என்று விளக்கினார். அப்புறம் தான் லால் சலாம் படத்தின் கதையை கேட்டேன். நடிப்பதற்கும் ஓகே சொன்னேன்.

#image_title

லால் சலாம் படத்தை பொறுத்தவரை ரஜினிகாந்தே இந்த படத்தை தயாரிக்கலாம். அவர்கிட்ட இல்லாத பணமா?, கோடி கோடியா வச்சுருப்பார் என்று நிறைய பேர் பேசிகிட்டாங்க.’பாபா’ படத்துக்கு பிறகு நமக்கு ராசியில்லை என்று படம் எடுப்பதை நிறுத்திட்டேன். நான் ஐஸ்வர்யாவிடம், நானே அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறினேன். நம்ம வாழ்க்கையில நண்பர்கள் தான் ரொம்ப முக்கியம். நண்பனுக்கும், எதிரிக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது. எதிரி மனசில் உள்ளே ஒன்னு வச்சுருப்பான். அவன் பெரிய எதிரி ஆகிடுவான் எனக் கூறினார். தொடர்ந்து சமீபத்தில் நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டுடாங்க. எனக்கும், விஜய்க்கும் ஏதோ போட்டி என்பது போல பேசுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

#image_title

நடிகர் விஜய் என் கண்ணுக்கு முன்பு வளர்ந்த பையன். சின்ன வயதிலிருந்தே அவரை பார்த்து வருகிறேன். ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் வந்து, ‘என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. படித்துவிட்டு நடிக்க வரட்டும். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்றார். அப்போது நான் விஜய்யிடம் ‘உங்களால் முடியுமா?’ என்று கேட்டேன், முடியும் என்றார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்தார்.. உழைப்பால் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். தற்போது விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலையாக உள்ளது.

#image_title

எனக்கு போட்டி நான் தான் என விஜய்யே கூறியிருக்கிறார. என் படத்துக்கு நான் தான் போட்டி என நானே சொல்லியிருக்கிறேன். விஜய்யை போட்டியாக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது. அதேபோல என்னை அவர் போட்டியாக நினைத்தால், அது அவருக்கும் மரியாதையாக இருக்காது. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா, கழுகு கதையை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். இது என் அன்பான வேண்டுகோள்” என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top