சூழ்நிலையை புரிந்து கொண்டு பல லட்சங்களை கொடுத்த ரஜினிகாந்த்.. கண்கலங்கிய நடிகர் லிவிங்ஸ்டன்..!

By Soundarya on கார்த்திகை 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நுழைந்தார். அதோடு அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

#image_title

இப்படி பல புகழுக்குரிய இவர் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் ஏழ்மையில் நிலைக்கே தள்ளப்பட்டார். அந்த காலகட்டத்தில் மனைவிக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார் அங்கு மருத்துவர்கள் உங்கள் மனைவியை காப்பாற்ற வேண்டும் என்றால் 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியிருக்கிறார்கள் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் குழம்பி போய் இருந்திருக்கிறார்.

அப்போது வந்த பட வாய்ப்பு தான் லால் சலாம். குடும்ப வறுமையை எண்ணிப் பார்த்த ரஜினிகாந்த் உங்கள் மனைவியை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக கேள்விப்பட்டேன் அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என கேட்டிருக்கிறார். இல்லை இருக்கட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பெருந்தன்மையோடு கூறிய லிவிங்ஸ்டனை பார்த்து நீங்கள் ஒரு அண்ணனாக என்னை நினைத்தால் தயவு செய்து சொல்லுங்கள் எவ்வளவு செலவாகும் என்று என்றாராம் ரஜினி.  25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொல்லி இருக்கிறார். உடனே ரஜினிகாந்த் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை லிவிங்ஸ்டனிடம் கொடுக்கும் போது ஒரு நிமிடம் கண்கலங்கி போனாராம் லிவிங்ஸ்டன்.